Wednesday, February 28, 2024
Home » முதல்கட்டமாக 50 மின்சார பஸ்கள் கேட்டு திட்ட அறிக்கை சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க மின்வாரியத்துடன் ஆலோசனை வேலூர் மாவட்டத்தில்

முதல்கட்டமாக 50 மின்சார பஸ்கள் கேட்டு திட்ட அறிக்கை சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க மின்வாரியத்துடன் ஆலோசனை வேலூர் மாவட்டத்தில்

by Francis

 

வேலூர், ஜன.26: வேலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 50 மின்சார பஸ்கள் கேட்டு திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க மின்வாரியத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடுமுழுவதும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளும் நகரங்களில் மாசு அதிகரிப்பதை கட்டுப்படுத்த மின்சார வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவித்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகம் சென்னை, விழுப்புரம், சேலம், கும்பகோணம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என எட்டு கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது.

இதன்மூலம் வௌிமாநிலம், ெவளிமாவட்டம், புறநகர், கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகங்களிலும் மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வேலூர் மாவட்டத்திற்கு முதல்கட்டமாக 50 மின்சார பஸ்கள் கேட்டு திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதோடு மின்சார பஸ்களுக்கு தேவையான சார்ஜிங் பாய்ண்ட் அமைப்பது, இடவசதி போன்றவை தொடர்பாக மின்வாரியத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலூர் மண்டல போக்குவரத்து கழக மேலாளர் கணபதி கூறுகையில், ‘வேலூர் மண்டல போக்குவரத்து கழகத்தில் வேலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 50 மின்சார பஸ்கள் கேட்டு அரசுக்கு திட்ட அறிக்ைக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க மின்வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அரசு அனுமதியுடன் விரைவில் மின்சார பஸ் சேவை தொடங்கும், என்றார்.

You may also like

Leave a Comment

fourteen + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi