சேந்தமங்கலம், ஆக.27: புதுச்சத்திரம் அடுத்த கூனவேலம்பட்டி புதூரை சேர்ந்தவர் செந்தில்(45), மேஸ்திரி வேலை செய்து வருகிறார். வெளியூரில் இருந்து மேஸ்திரி, சித்தாள் அழைத்து வந்து வீட்டின் அருகே தங்க வைத்து, கட்டிட வேலைகளை செய்து வருகின்றனர். கடந்த வாரம், செந்தில் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை காணாமல் போய்விட்டது. பீரோவை உடைக்காமல் சாவியை எடுத்து திறந்து மர்ம நபர் நகைகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து செல்வராணி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்திருந்தார். இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து, செந்திலிடம் வேலை செய்து வந்த ராசிபுரம் அடுத்த அத்தனூரை சேர்ந்த தேவராஜ் மகன் கார்த்திக் (30) என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.