நாமக்கல், செப்.5: நாமக்கல், செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர் செல்வராஜ், அறங்காவலர் ஜெயம் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்வி நிறுவனங்களின் செயலாளர் கவித்ரா நந்தினி, செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியின் செயல் இயக்குனர் கார்த்திக் ஆகியோர் பேசினர். கல்லூரி முதல்வர் ஜெகன் முன்னிலை வகித்து பேசினார். விழாவில், கல்வியாளர் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு பேசுகையில், ‘மாற்றத்தை ஏற்க, மாணவ, மாணவிகள் தெளிவான இலக்குகளை அமைக்க வேண்டும்,’ என்றார். இதில், பல்வேறு துறைத் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா
previous post