அந்தியூர், ஜூன் 18: அந்தியூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட புகாரின் பேரில் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளை நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெற்ற புகார் மனு பெறப்பட்டு உள்ளது.
அதன் பேரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாபு சரவணன் தலைமையில் இன்று நடக்கிறது. இதில், அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் முன்புறம் இருந்து, தவிட்டுப்பாளையத்தில் உள்ள யூனியன் அலுவலகம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ரோட்டின் இரு புறங்களிலும் உள்ள சாலை ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் நிரந்தரமாக அகற்றப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.