ஈரோடு: முதலமைச்சரை தரைகுறைவாக பழனிசாமி விமர்சித்தது தவறு என ஈரோடு பிரச்சாரத்தில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் கண்டனம் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மணல் மேடுபகுதியில் இருந்து சூரம்பட்டி நான்குரோடு பகுதியில் வரை தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் இணைந்து விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும் மீன் விற்பனை செய்து பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சுதீஷ் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரை விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சுதீஷ் அவ்வாறு விமர்சித்திருந்தால் அது தவறானது,கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்தார். …