சாயல்குடி, ஜூன் 6: செல்வநாயகபுரத்தில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நான்காம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் செல்வநாயகபுரம், வைத்தியனேந்தல், மேலப்பண்ணக்குளம், கீழப்பண்ணைக்குளம், மணலூர், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், வேல்முருகன் கலந்து கொண்டு புதிய பயனாளிகளுக்கு பதிவு செய்தனர்.