கீழ்வேளூர், ஆக.4: நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டத்தில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் இந்திராகாந்திசேகர் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துக் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி பகுதிகளில் புதிதாக மின் கம்பங்கள் நடுவதற்கும், பழுதடைந்த மின்விளக்குகளை உடனடியாக சரி செய்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மழை காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக வடிகால்களை தூர்வார கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.