காரிமங்கலம், ஜூன் 8: காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடப்பு 2024-25ம் ஆண்டிற்கான முதற்கட்ட கலந்தாய்வு, வரும் 10 மற்றும் 11ம்தேதி தேதிகளில் நடக்கிறது. 10ம்தேதி பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாடு, புள்ளியல் மற்றும் பிசிஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 11ம்தேதி பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பிகாம், பிபிஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் முதற்கட்ட கலந்தாய்வு நடக்கிறது. கல்லூரியில் சேர விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு, செல்போன் மற்றும் இ-மெயிலில் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே, மாணவிகள் உரிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், பாஸ்போட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன், கலந்தாய்வில் உரிய நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுமென கல்லூரி முதல்வர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
முதற்கட்ட மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு
66
previous post