விருதுநகர், நவ.8: விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன். இவர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று பதவியேற்க செல்கிறார். இதற்காக முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று இரவு பிரிவு உபசார விழா நடைபெற்றது. பிரிவு உபசார விழாவில் ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்காக பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்றிரவு திடீர் சோதனை நடத்தினர். இரவு 11 மணி வரை நடைபெற்ற சோதனையில் ரூ.13 ஆயிரம் பணம் சிக்கியது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.