பூந்தமல்லி, செப்.4 : பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள முட்புதர்கள் நிறைந்த காலி இடத்தில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக நேற்று பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது உள்ளாடை மற்றும் சட்டை அணிந்த நிலையில் ஒரு வாலிபர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்து போனவர் சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) என்பது தெரிய வந்தது. இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் கீழே விழுந்து இறந்தாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.