முசிறி, மே 25: முசிறி நகராட்சியில் கட்டப்பட்டு வரும் வள ர்ச்சி திட்ட பல்வேறு பணிகளை நகராட்சி மண்டல இயக்குனர் தாணுமூர்த்தி ஆய்வு நேரில் செய்தார். முசிறி புதிய பேரு ந்து நிலைய வளாகத்தில் நகராட்சி சார்பில் சுகாதார வளாகம் ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை தஞ்சாவூர் – நகராட்சி மண்டல இயக்குனர் தாணுமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முசிறி நகராட்சியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்தும் தரமாகவும் முடிக்க ஆலோசனை வழங்கினார்.அப்போது நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி, நகராட்சி பொறியாளர் சம்பத்குமார், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.