முசிறி, ஆக.20: திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பியாக சுரேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் வேதாரண்யம் போலீஸ் டிஎஸ்பியாக வேலை பார்த்தவர் பணி மாறுதல் காரணமாக முசிறியில் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார். முசிறி கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பி சுரேஷ்குமாரை நேரில் சந்தித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.இங்கு டிஎஸ்பியாக பணிபுரிந்த யாஸ்மின் சென்னையில் உள்ள போலீஸ் அகாடமிக்கு பணி மாறுதல் காரணமாக சென்றுள்ளார்.