முசிறி, ஜூலை 5: முசிறி ஜெசிஐ தலைவர் வினோத்குமார் கூறியிருப்பதாவது,
முசிறி கைகாட்டியில் துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தும் கழிவுகளை அகற்றும் வாகனங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை JCI முசிறி சார்பில் வழங்கப்பட்டது.சிறப்பு அழைப்பாளர்களாக முசிறி நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவகுமார், முசிறி காவல்துறை துணை ஆய்வாளர் கலைச்செல்வன், சுஜாதா, பாலன், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு ஒலிபெருக்கிகளை வழங்கினர்.மேலும இந்நிகழ்வு சிறப்பாக நடக்க உதவிய முசிறி நகராட்சி ஆணையர், முசிறி காவல்துறை, முசிறி நகர துப்புரவு பணியாளர்கள், JCI நண்பர்கள் மற்றும் முசிறி பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.