முசிறி, ஜூலை 6: முசிறி சார்பு நீதிமன்ற நீதிபதியாக இரண்டு வருடத்திற்கு மேல் பணிபுரிந்து வந்த நீதிபதி ஜெயக்குமார் தற்போது சேலம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவராக பணி மாறுதல் ஆனார். இவருக்கு முசிறி வழக்கறிஞர் சங்கம் சார்பில் பிரிவுபசார விழா சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சங்க தலைவர் மருதையா தலைமை வகித்தார்.
சங்க செயலாளர் சுகுமார், பொருளாளர் மருதுபாண்டி, துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், இணைச் செயலாளர் பாஸ்கர், அரசு வழக்கறிஞர் சப்தரிசி, மூத்த வழக்கறிஞர்கள் பாஸ்கர், செங்குட்டுவன் வாழ்த்துரை வழங்கினர். பணி மாறுதலில் செல்லும் நீதிபதி ஜெயக்குமார் ஏற்புரை ஆற்றினார். வழக்கறிஞர்கள் காமராஜ், கணபதி, பொன்குமார், செந்தில்குமார். தினேஷ் மற்றும் சார்பு நீதிமன்ற அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.