முசிறி, ஏப்.19: திருச்சி மாவட்டம் முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்தின் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ், தனது குழுவினருடன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகாதேவியில் கோழிக்கறி கடையில் ஜோதிவேல்(57) என்பவரும், நடுப்பட்டி பாலம் அருகில் தேக்கமலை(70) என்பவரும், உமையாள்புரம் மெயின்ரோடு பகுதியில் காளியாபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார்(40) என்பவரும் அரசு மதுபானங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பதை கண்டுபிடித்து மூவரையும் கைது செய்தார். மேலும் 3 பேரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.