முசிறி, ஜூலை 5: திருச்சி மாவட்டம், முசிறியில் வீடு , வீடாக சென்று அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ ஆகியோர் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மக்களுடன் ஸ்டாலின் செயலி மூலம் வீட்டில் அமர்ந்து உறுப்பினர்களை சேர்த்தனர்.
அப்போது உறுப்பினர்கள் சேர்க்கைக்கான அடையாளத்தை வீட்டின் முகப்பில் ஓரணியில் தமிழ்நாடு முதல்வர் படம் உள்ள ஸ்டிக்கரை ஒட்டினர். தொடர்ந்து அனைத்து வீடுகளிலும் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், நகர செயலாளர் சிவகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், அதனை தொடர்ந்து அமைச்சர் நேருவிடம் பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.