ஆறுமுகநேரி, ஜூன் 6: முக்காணி அரசு பள்ளியில் புதிய கல்வி ஆண்டில் பள்ளியின் வளர்ச்சி திட்டமிடுவது குறித்த நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டத்திற்கு தலைவர் சங்கர நாராயணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சற்குணராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஷீபா, துணை தலைவி காந்திமதி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஸ்டீபன் விஜய் வரவேற்றார். கூட்டத்தின்போது பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு பூ கொடுத்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர். மேலும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த கல்வியாண்டு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி, திறனாய்வுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் அதிகப்படியான மாணவர்களை வெற்றி பெறச்செய்து, மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகையை பெற்று தருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பில் 100% பெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவியருக்கு பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் பரமசிவன் பாராட்டு தெரிவித்து பரிசுத்தொகை வழங்கினார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் பிரதிநிதி சுதா நன்றி கூறினார்.
முக்காணி அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
0