வந்தவாசி, மார்ச் 4: வந்தவாசி அடுத்த மழையூர் கிராமத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் ஒரு வீட்டின் தாழ்பாளை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4 சவரன் தங்க நகை, ₹3000 ரொக்கப் பணத்தை திருடிக் கொண்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். இதேபோன்று கடந்த 28ம் தேதி இரவு பெரணமல்லூர் வடுவல்குடிசை பகுதியில் கர்ப்பிணி பெண் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம கும்பல் அவரது 3 சவரன் தாலி சங்கிலியை அறுத்து உள்ளனர். அப்போது அந்தபெண் கூச்சலிட்டதால் அவரது தாய் முகமூடி அணிந்த நபரை பிடிக்க முயன்றார். அப்போது வீட்டின் வெளியே தயார் நிலையில் இருந்த மற்றொரு முகமூடிளை அணிந்த நபர் கையில் உருட்டு கட்டை வைத்திருந்ததால் செய்வதறியாமல் திகைத்து கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை அறிந்து இருவரும் வயல்வெளி பகுதியாக தப்பி ஓடினர்.
இதுகுறித்து தனித்தனியே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு திருட்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்ததால் இதில் இரண்டு சம்பவத்திலும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டு இருப்பார்கள் என கருதி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தனி கவனம் செலுத்தி முகமூடி கொள்ளையர்களை கண்டுபிடிக்க வேண்டி திருவண்ணாமலை எஸ்.பி சுதாகர் உத்தரவின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் 8 பேர் கொண்ட குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு 2 குற்ற சம்பவங்களையும் விரைவாக கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த பகுதிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தனர். அதில் இரண்டு சம்பவங்கள் நடந்த பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத பகுதிகளில் தங்களது திருட்டு சம்பவத்தை செயல்படுத்தியது தெரியவந்தது. மேலும் அவர்கள் வந்த பகுதி சம்பவம் நடந்த நேரம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டதில் வரும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சிக்கி உள்ளாரா என ஆய்வு செய்து வருகின்றனர். திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் சேர்ந்தவர்களா அல்லது ஆந்திர மாநிலம் ஓஜி குப்பம் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு, நிலஅளவை என மொத்தம் 62 கோரிக்கை மனுக்களை ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் பெற்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.