குடியாத்தம், செப். 3: கடனை திருப்பி செலுத்தும்படி நிதிநிறுவனத்தினர் ஆபாசமாக பேசி மிரட்டியதால் முகநூல் லைவ் வீடியோவில் முதியவர் விஷம் குடித்ததால் ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா (51). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனத்தில் ₹2 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் இவரது வீட்டு முன்பு சென்று தகாத வார்த்தைகளால் பேசி வட்டி மற்றும் அசல் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜா நேற்று அவரது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இந்த காட்சி முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் ராஜாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகநூல் லைவ் வீடியோவில் முதியவர் தற்கொலை முயற்சி குடியாத்தத்தில் பரபரப்பு கடனை செலுத்த நிதிநிறுவனத்தினர் மிரட்டல்
previous post