கொள்ளிடம், மே20: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பட்டியமேடு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதி இன்றி டிராக்டரில் மணல் கடத்திக்கொண்டு கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் நேற்று வேகமாக வந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்த கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டியமேடு கிராமம் அருகே சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த டிராக்டரை மடக்கினர். அப்போது போலீசாரை கண்டதும் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் மற்றும் டிரைலரை மணலுடன் பறிமுதல் செய்து கொள்ளிடம் போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில்,மணல் கடத்துவதற்கு பயன்படுத்திய டிராக்டர் கொள்ளிடம் அருகே உள்ள பட்டியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் உரிமையாளர் உரிமையாளரை தேடி வருகின்றனர்.