அருப்புக்கோட்டை, ஆக.21: மீனாட்சி சொக்கநாதார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த கோவிலில் 14 உண்டியல்கள் உள்ளன. உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. ராஜபாளையம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மணிபாரதி தலைமையில் ஆய்வாளர் சந்திரமோகன், செயல்அலுவலர் தேவி முன்னிலையில் உழவாரப்பணி குழுவினர், தன்னார்வலர்கள், கோயில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.