திருவாரூர், செப். 2: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும் என மீன்வள துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அதன்படி ரூ.20 ஆயிரம் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் 20 கிலோ நைலான் வலைகள், 50 சதவீதம் அதாவது ரூ.10 ஆயிரம் பின் நிலை மானியமாக வழங்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில், பயன் பெற விருப்பமுள்ள மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு உரிய ஆவணங்களுடன் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.