எப்படிச் செய்வது?மீட்பால் செய்ய கொடுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சின்னச் சின்ன உருண்டைகளாக செய்யவும். காய்கறிகளை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி வெஜிடபிள் ஸ்டாக், காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், மட்டன் உருண்டைகளையும் சேர்த்து வேக விடவும். அனைத்தும் வெந்ததும் இறக்கி ஸ்பிரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.