பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாளை 20 ஊராட்சிகளில் மார்ச் மாதம் முழுவதும் கொண்டாட தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அறிவுரையின்படி, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஆலோசனை கூட்டம் காணியம்பாக்கத்தில் ரங்கநாதர் கோயில் அருகே உள்ள மீஞ்சூர் தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தெற்கு ஒன்றிய செயலாளரும், காணியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கா.சு.ஜெகதீசன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பாண்டுரங்கன், தன்சிங், ஸ்டாலின், முனுசாமி, குணாளன், பார்த்தசாரதி, மகேந்திரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முதல்வர் மார்ச் 1ஆம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தில் அடங்கிய 20 ஊராட்சிகளில் மார்ச் மாதம் முழுவதும் பிறந்தநாள் கொண்டாடுவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .இந்த பிறந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, கல்வெட்டு திறப்பது, கழக கொடி ஏற்றுவது, பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குவது, 20.ஊராட்சிகளில் சுவர் விளம்பரம் செய்தல், ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை அன்னதானம் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், மனோகரன், மணி, பார்த்திபன் ,நேதாஜி, ரமேஷ் ,காட்டூர் ராஜேஷ், ஹரி,.நேதாஜி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர் ….