செய்முறை: முதலில் வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் நறுக்கிய பூண்டையும் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள். அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகுப் பொடி, சுக்குப் பொடி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். சூப் கலவை நன்றாக வெந்து ஒரு டம்ளர் அளவுக்குக் குறைந்ததும் அடுப்பை அணைத்து மூடிவிடுங்கள். பின்பு மிதமான சூட்டில் வடிகட்டிப் பருகுங்கள். இப்போது மழைக்கு இதமான மிளகு சூப் தயார்.பலன்கள்: மிளகு – பூண்டு சேர்த்து செய்யப்படும் இந்த சூப் அருந்தி வர, மழைக்காலத்தில் ஏற்படும் சளி, கபம் பிரச்னை, செரிமானக் கோளாறு போன்றவற்றிற்கு தீர்வாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி ஆரோக்கியமாக வைக்கும்….