திண்டுக்கல், ஆக.21: திண்டுக்கல் பஞ்சம்பட்டி சர்ச்சில் புகுந்து மக்களை மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் பூங்கொடியிடம் பஞ்சம்பட்டி ஊர் தலைவர் சதீஷ்குமார் மனு அளித்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் நி.பஞ்சம்பட்டியில் கிறிஸ்தவ சமுதாய மக்கள் 25 ஆயிரத்திற்கும் மேல் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் எங்கள் பகுதியில் உள்ள சர்ச்சில் நுழைந்து திருப்பலியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் எங்கள் பகுதி மக்கள் பயத்தில் உள்ளனர். எனவே சர்ச்சில் புகுந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.