தாரமங்கலம், செப்.4: தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கிராமம் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி(37). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் சரபங்கா நதியோரத்தில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மின் மோட்டார் மூலம் விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வீட்டுக்கு திரும்பி விட்டார். மின்சாரம் வந்த பிறகு திரும்பவும் நீர்பாய்ச்ச சென்றபோது, மின் மோட்டாரின் ஒயரை அதே பகுதியைச் சேர்ந்த விஜி(27), காட்டு ராஜா(26) ஆகியோர் திருடிக் கொண்டிருந்தனர். பழனிசாமி வருவதைப் பார்த்தவுடன் ஆற்றில் குதித்து தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விஜியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காட்டு ராஜாவை தேடி வருகின்றனர்.
மின் வயர் திருடியவர் கைது
previous post