திருப்பரங்குன்றம், பிப். 28: மதுரை, திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மின்சார பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்கும் வழிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு தெற்கு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சண்முகநாத பூபதி விளக்கினார். உதவி மின் பொறியாளர் சகுந்தலாதேவி, சிறப்பு நிலை முகவர் வெள்ளையராவுத்தர் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.