இடைப்பாடி, நவ.5: இடைப்பாடி கோட்டத்தை சுற்றியுள்ள மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், நாளை (6ம் தேதி), கொங்கணாபுரம் செல்லும் சாலையில் உள்ள இடைப்பாடி கோட்டம் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் முன்னிலை வகிக்கிறார்.
இதில் இடைப்பாடி நகரம், சித்தூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, தேவூர், இடைப்பாடி ஒன்றிய பகுதி மற்றும் கொங்கணாபுரம், கண்ணந்தேரி, செட்டிமாங்குறிச்சி, ஜலகண்டாபுரம் நகரம் மற்றும் புறநகரம் பகுதியைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள், மின்விநியோகம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, இடைப்பாடி கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.