கோபி, ஜூலை 1: கோபி பகுதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (2ம் தேதி) நடைபெறுகிறது.
கோபி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் கோபி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சின்னசாமி கலந்து கொண்டு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதால் மின் உபயோகிப்பாளர்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு மேற்பார்வை பொறியாளர் சின்னசாமி தெரிவித்து உள்ளார்.