ராஜபாளையம், ஜூன் 30: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஜூலை 1) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், விருதுநகர் மின் பகிர்மானம் வட்டம் செயற்பொறியாளர் லதா தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில், மின் நுகர்வோர்கள் தங்களது மின்வாரிய சம்பந்தப்பட்ட குறைகளை, மேற்பார்வை செயற்பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயனடையலாம் என ராஜபாளையம் மின் பகிர்மானம் செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவிதுள்ளார்.