தேன்கனிக்கோட்டை, பிப்.26: தேன்கனிக்கோட்டை கெலமங்கலம் செல்லும் சாலையில், கலகோபசந்திரம் கிராமம் அருகே, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் ஏற்றும் நிலையம் உள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் பீடி, சிகரெட் பற்றவைத்து அணைக்காமல் போட்டு விட்டு ெசன்றதால், அங்கு சாலையோரத்தில் உள்ள சருகுகள் நேற்று மாலை தீப்பற்றி எரிந்தது. அப்போது, முள்வேலியில் இருந்த மின் கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள், மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள், அப்பகுதியில் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர், மின் ஊழியர்கள் விரைந்து சென்று தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அதனை தொடர்ந்து, மின் விநியோகம் செய்யப்பட்டது.
மின் கம்பத்தில் பற்றி எரிந்த தீ
0
previous post