வந்தவாசி ஜூலை 6: வந்தவாசி அடுத்த அதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(65) விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே கிராமத்தில் உள்ளது. இதில் இவர் நீர் பாய்ச்சுவதற்காக நேற்று காலை சென்றுள்ளார். அப்போது கால் வழுக்கி அருகே உள்ள சாமிக்கண்ணு(60) அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் வயலில் அவரது கால் பட்டது. அப்போது இவர் காட்டுப்பன்றிக்காக வைத்திருந்த மின்வேலியில் பட்டு சம்பவ இடத்திலேயே குப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் தெய்வசிகாமணி கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து மின்வேலி அமைத்து தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
மின்வேலியில் சிக்கி விவசாயி பலி அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வலை வந்தவாசி அருகே
0