பாலக்கோடு, செப்.5: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள வீரன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனிராஜ். இவரது மகன் பிரபு(25). இவர், கடந்த திங்கட்கிழமை அதிகாலை, விவசாயி கண்ணப்பன் என்பவரின் விவசாய நிலத்தில், மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் மகேந்திரமங்கலம் காவல் நிலையம் முன்பு, ஓசூர்-தர்மபுரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், சமாதானமடைந்து கலைந்து சென்றனர். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், மின்வேலி அமைத்திருந்த நிலத்தின் உரிமையாளரான விவசாயி கண்ணையன்(62) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்வேலியில் சிக்கி வாலிபர் பலியான சம்பவத்தில் ஒருவர் கைது
previous post