திண்டுக்கல், ஜூலை 23: நாளை முதல் ஒரு மாத காலம் வரை தினமும், திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு பெயர் மாற்ற முகாம் நடைபெற உள்ளது. எனவே மின் நுகர்வோர், தங்களது உரிய ஆவணங்களுடன், முகாமில் கலந்து கொண்டு மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றுவதற்கான கட்டணம் ரூ.726 செலுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த சிறப்பு பெயர் மாற்ற முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளுக்கு, பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என திண்டுக்கல் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.