காரைக்குடி, ஜூலை 9: காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இந்நிலையில் சாக்கோட்டை அருகே சித்திவயலில் ரஞ்சித் விவசாய நிலத்தில் போர்வெல் போடும் பணியில் ரஞ்சித் (36), பாண்டித்துரை(36), செல்வராஜ்(39) ஆகிய மூவரும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என மழை பெய்தது.
மழைக்கு அருகே இருந்த பனைமரத்தின் அடியில் ஒதுங்கி நின்று கொண்டு இருந்தனர். திடீர் என எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் மூன்று பேரும் காயமடைந்த நிலையில், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.