கோவை, ஜூலை 1: மின்நுகர்வோரின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை டாடாபாத்தில் உள்ள கோவை மின் அலுவலகத்தில் நாளை (2ம் தேதி) காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் சதீஷ்குமார் முன்னிலையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், கோவை மின் அலுவலகத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மின்வாரியம் சம்பந்தமான குறைகளை முறையிட்டு பயனடையலாம் என கோவை மின்பகிர்மான செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.