கோவை, செப்.3: கோவை குனியமுத்தூர் அலுவலகத்தில் கோவை தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (4ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு கோவை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் எம்.சுப்பிரமணியனிடம் தங்கள் குறைகளை கூறி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.