நாமக்கல், நவ.15: நாமக்கல் பகுதிகளான நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியபட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசாணம், சின்னமுதலைப்பட்டி ஆகிய இடங்களில் இன்று(15ம்தேதி) மின்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மழை காரணமாக இந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.