மதுரை, ஜூன் 25: தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தின் மதுரை அமலாக்க கோட்டத்திற்குட்பட்ட அதிகாரிகள் ஜூன் 4, 5ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் உள்ள திருவாடானை, தொண்டி, திருவெற்றியூர், ஏர்வாடி, கீழக்கரை, காஞ்சிரங்குடி, கமுதி, உச்சிப்புளி, திருச்சுழி, பகுதிகளில் அதிரடியாக வீடுகள், கடைகள், வணிக நிறுவனம் என பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
இதில் 10க்கும் மேற்பட்டோர் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.9.83 லட்சம் இழப்பீடு ஏற்படுத்தியிருப்பது உறுதியானது. இதில், மின் திருட்டில் ஈடுபட்டோர் தாமாகவே முன்வந்து அபராதத் தொகையை கட்ட முன்வந்து ரூ.38 ஆயிரம் அபராதமாக செலுத்தினர். பொதுமக்கள் மின் திருட்டு குறித்த புகார்களை 94430 37508 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தின் மதுரை அமலாக்க கோட்ட செயற்பொறியாளர் எம்.மனோகரன் தெரிவித்துள்ளார்.