சின்னசேலம், ஜூன் 18: சின்னசேலம் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அருகே உலகியநல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் விஜயன் (66) விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயன் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். மேலும் நேற்று காலை 5 மணிக்கு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச விஜயன் சென்றுள்ளார். பின்னர் சுமார் 8.30 மணி அளவில் அவருடைய மகன் ஜெயக்குமார் சாப்பாடு எடுத்துக்கொண்டு வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது வயலில் உள்ள மீட்டர் பெட்டி அருகில் விஜயன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து பதறிப்போன ஜெயக்குமார் அவரை எழுப்பி பார்த்தபோது கையில் மின்சாரம் தாக்கியதற்கான அறிகுறி தெரிந்துள்ளது. மேலும் அவர் இறந்து போயிருந்தார். இதுகுறித்து ஜெயக்குமார் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விஜயன் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
0