கிருஷ்ணகிரி, மே 24: பாரூர் அருகே சுவாமி சிலையை டிராக்டரில் எடுத்துச் சென்றபோது, மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்(37). விவசாயியான இவர், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே பெரிய புளியம்பட்டி பட்டாளம்மன் கோவில் விழாவிற்கு வந்திருந்தார். விழாவில் டிராக்டர் வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. விழாவிற்கு சென்றிருந்த சொக்கலிங்கம், டிராக்டரில் ஏறி சிலை அருகில் அமர்ந்திருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற மின் கம்பியின் மீது சுவாமி சிலையின் மேலே இருந்த குடை உரசியது. இதனால், சொக்கலிங்கம் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில், மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சொக்கலிங்கம் உயிரிழந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
0
previous post