சமயபுரம், ஏப்.4: வாத்தலை அருகே உள்ள கரளாவழி கிராமத்தில் நேற்று முன்தினம் மின்சாரம் தடைப்பட்டது. இதுகுறித்து மின்சார வாரிய அலுவலர்களிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் நேற்று வரை உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஜீவபுரம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்தர் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் இருப்பதால் இந்த சம்பவம் குறித்து ஆமூர் விஏஓ மூர்த்தி அளித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் கரளாவழி கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ், காமராஜ், அறிவழகன், மருதை, பாபு உள்ளிட்ட 30 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தடைபட்டதால் சாலைமறியல் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
51
previous post