பாலக்காடு, ஜூன்10: பாலக்காடு – பொள்ளாச்சி சாலையில் மின்கம்பத்தில் கார் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரத்திலிருந்து காரில் டிரைவர் உட்பட 5 பேர் குழு நேற்று கொடைக்கானலிற்கு சுற்றுலா சென்றனர். பாறையை அடுத்த எராஞ்சேரி பகுதியில் வைத்து கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரும் மின்கம்பத்தில் மோதியது. இதில் மலப்புரத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பாலக்காடு புதுச்சேரி கசபா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேதமான மின்கம்பத்தை சீரமைக்க உரிய தொகை வழங்குவதாக சுற்றுலா பயணிகள் ஒப்புதல் அளித்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் பலமணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.