சிவகாசி, ஜூலை 1: சிவகாசி பிச்சாண்டி தெருவை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன்(31). இவரும் இவரது மனைவி ஜெனிபரும் டூவீலரில் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிபஸ் மோதி 2 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 2 பேருக்கும் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து மினிபஸ் டிரைவர் பொன்செல்வம் மீது சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.