நெல்லை, ஆக. 29: நெல்லை மாவட்டம் உவரி அருகே நவலடி, ரேஷன் கடை தெருவை சேர்ந்தவர் வடிவேல் (40). மினி லாரி ஓட்டுநரான இவர் கடந்த 17ம் தேதி தனது மினி லாரியை அதே பகுதியில் உள்ள இரும்பு கடை அருகில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றா. கடந்த சில நாட்களாக மினி லாரி வாடகைக்கு தேவைப்படும் வாடிக்கையாளர்கள் அவரை தொடர்பு கொள்ளாததால் அந்த மினி லாரியை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மினி லாரியை நகர்த்த முயன்றபோது லாரி ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை. அப்போது அவர் மினிலாரியை சோதனை செய்த போது அதில் இருந்த ரூ.3ஆயிரம் மதிப்பிலான பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வடிவேல் அளித்த புகாரின் பேரில் உவரி போலீசார் வழக்கு பதிவு செய்வு விசாரணை நடத்தி வருகின்றனர்.