ஓசூர், ஆக.18: மத்திகிரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எடையநல்லூர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூர் அருகே நாகொண்டப்பள்ளி ஊராட்சியில் எடையநல்லூர், கிருஷ்ணா குடியிருப்பு பகுதி, அஞ்செட்டி மேஸ்திரி நகர் பகுதி, மஞ்சுநாத் நகர், வெங்கடேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாநகர செயலாளர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாநகர குழு உறுப்பினர் மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேவராஜ், திம்மாரெட்டி, முனிவெங்கடப்பா, பட்டேல், ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணிக்கவேல் நன்றி கூறினார்.
மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
previous post