மதுரை, மே 26: மதுரை மாவட்ட விவசாயிகள் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி, தங்கள் விவசாய நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்தலாம் என, மாவட்ட வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த அவர்கள் கூறியதாவது: வேளாண்மையில் மகசூலை அதிகப்படுத்த ரசாயன உரங்களை விவசாயிகள் அதிகளவில் உபயோகப்படுத்தி வரும் நிலையில், மண்ணின் தன்மையும், வளிமண்டலமும் மாசடைந்து வருகிறது. ஆகையால் மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், மகசூலை அதிகரிக்கவும் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை உள்பட 22 மாவட்டங்களில் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.