அரூர், ஆக. 6: அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின், கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் சோலை ராமச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் தாழை லட்சுமணன், ஒன்றிய செயலாளர்கள் மூவேந்தன், திருலோகன், பாலைய்யா, தொகுதி துணை செயலாளர் கேசவன் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா, முன்னாள் மண்டல செயலாளர் நந்தன், மண்டல துணை செயலாளர் மின்னல்சக்தி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், வரும் 17ம் தேதி கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, அனைத்து கிராமங்களிலும் கொடியேற்றி, பெயர் பலகை திறந்து இனிப்புகள் வழங்கியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா-பென்சில் வழங்கி கொண்டாடுவது என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அரசு ஊழியர் பேரவை மாநில துணை செயலாளர் மாதையன், ஆசிரியர் உரைவாள், அம்பேத்கர், ஆசிரியர் சேகர், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் காதர்பாஷா, ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி, ராஜ்குமார், தமிழ் செல்வன், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.