திருச்சி, ஆக.28: மகளிர் வாசகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது.
மகளிர் வாசகர்கள் சந்திப்பு திருச்சி மாவட்ட நூலகம் மற்றும் மகளிர் வாசகர் வட்டம் இணைந்து மகளிர் வாசகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியினை மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் துவக்கி வைத்தார். வாசகர் வட்டத் தலைவர் கோவிந்தசாமி, முனைவர் அருணாசலம், வைகுண்டமூர்த்தி. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலட்சுமி, கார்த்திகா கவின்குமார், செசிலி, உமா, சரோஜா, அருணா, தேவிகா சிவகுமார், சுமித்ராதேவி, சுமதி, அனிதா, நமீதா, மங்களமேரி போன்ற 20-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட பெண் வீராங்கனைகளை குறித்தும், இன்று பெண்களின் உச்சமும் வீழ்ச்சியும் பற்றி எழுச்சியுடன் பேசினர். முடிவில் முதல் நிலை நூலகர் தனலெட்சுமி நன்றி கூறினார்.